< Back
சினிமா செய்திகள்
சினிமாவில் பாலியல் தொல்லையா? நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கம்
சினிமா செய்திகள்

சினிமாவில் பாலியல் தொல்லையா? நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கம்

தினத்தந்தி
|
8 Dec 2022 10:02 AM IST

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் நிலைமை குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் கருத்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்.

சினிமாவில் நடிக்க வாய்ப்பு அளிப்பதற்கு பிரதிபலனாக இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தங்களை படுக்கைக்கு அழைத்த பாலியல் தொல்லை அனுபவங்களை நடிகைகள் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்கள். இதில் பிரபல நடிகர்கள், தயாரிப்பாளர்கள். இயக்குனர்கள் சிக்கி உள்ளனர். இந்த நிலையில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் நிலைமை குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் கருத்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில். ''சக நடிகைகள் சினிமாவில் இருக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து என்னிடம் பேசி உள்ளனர். ஆனால் எனக்கு அதுபோன்ற சம்பவம் எதுவும் ஏற்படவில்லை. நான் அப்படிப்பட்ட பெண் இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். எனவே யாரும் என்னிடம் தவறான நோக்கில் நெருங்கவில்லை. யாரேனும் படத்தில் நடிக்க வாய்ப்பு அளிப்பதற்காக என்னை தவறான கண்ணோட்டத்தில் அணுகி பாலியல் தொல்லை கொடுத்தால் நான் அந்த வாய்ப்பை உதறி தள்ளி விடுவேன். சினிமாவை விட்டு விலகி வேறு வேலைக்கும் போய் விடுவேன்" என்றார்.

மேலும் செய்திகள்