< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
பாலியல் தொல்லை... ஆண்ட்ரியா பகிர்ந்த கசப்பான அனுபவம்
|18 Nov 2022 8:14 AM IST
நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள். தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ஆண்ட்ரியாவும் தான் எதிர்கொண்ட கசப்பான பாலியல் தொல்லை அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து ஆண்ட்ரியா அளித்துள்ள பேட்டியில், ''சமூகத்தில் நிறைய பெண்களுக்கு பாலியல் பலாத்கார கொடுமைகள் நடக்கின்றன. சில சமயங்களில் நானும் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டு இருக்கிறேன். தெருவில் நடந்து போகும்போது யாரோ பின்னால் வந்து என்னை தட்டி விட்டு செல்வார்கள், சில நேரம் எல்லை மீறுவார்கள். கலைநிகழ்ச்சிகளிலும் இவை நடக்கும். நாம் அதை உணர்வதற்குள் அங்கிருந்து நகர்ந்து விடுவார்கள். ஆண்கள் இப்படிதான் நடந்து கொள்வார்களா? என்று நினைக்க வைத்து விடுகிறார்கள். இது சாதாரணமான விஷயம் இல்லை. பாலியல் வன்கொடுமை நடக்கும்போதுதான் பதறுகிறார்கள். ஆரம்பத்திலேயே கண்டித்தால் எல்லை மீறல்கள் இருக்காது" என்றார்.