< Back
சினிமா செய்திகள்
பாலியல் வழக்கு: நடிகர் ஜாமீனை ரத்து செய்ய நடிகை மனு
சினிமா செய்திகள்

பாலியல் வழக்கு: நடிகர் ஜாமீனை ரத்து செய்ய நடிகை மனு

தினத்தந்தி
|
4 July 2022 8:34 PM IST

பாலியல் வழக்கில் சிக்கிய நடிகர் விஜய் பாபு ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று இளம் நடிகை சுப்ரீம் கோர்ட்டில் அளித்துள்ள மனுவில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

பிரபல மலையாள நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக இளம் நடிகை கடந்த ஏப்ரல் மாதம் கொச்சி போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராகுமாறு விஜய்பாபுவுக்கு நோட்டீஸ் அனுப்பியதும் அவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார். முன்ஜாமீன் கேட்டு கோர்ட்டிலும் மனு தாக்கல் செய்தார். சில நிபந்தனைகளுடன் அவருக்கு முன்ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து கொச்சி திரும்பி போலீசில் ஆஜரானார். இந்த நிலையில் புகாரை வாபஸ் வாங்குமாறு நடிகர் தரப்பில் இருந்து ரூ.1 கோடி வரை பேரம் பேசுவதாக பாதிக்கப்பட்ட நடிகை புகார் தெரிவித்தார். விஜய் பாபுவுக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டிலும் நடிகை மனு தாக்கல் செய்துள்ளார். பாலியல் வழக்கில் வெளிநாடு தப்பியோடிய விஜய்பாபு முன்ஜாமீன் கிடைத்த பிறகே இந்தியா திரும்பியுள்ளார். இதன் மூலம் சட்டத்துக்கு சவால் விட்டு இருக்கிறார். ஜாமீனை தொடர்ந்தால் சாட்சியங்களை அழித்து விடுவார். எனவே விஜய்பாபு ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்