< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
தமிழ் திரைஉலகில் கால் பதிக்கும் கன்னட நடிகை
|17 Sept 2022 12:15 AM IST
தமிழ் திரைஉலகில் கன்னட நடிகை கால் பதிக்கிறார்.
பெங்களூரு: கன்னட திரைஉலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் சர்மிளா மாந்த்ரே. இவர் கன்னடத்தில் 'காலிபாடா-2', 'சஜனி', 'தச்ரா' உள்பட ஏராளமான படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் நடித்த படங்களில் பல படங்கள் மாபெரும் வெற்றி அடைந்துள்ளன. இந்த நிலையில் இவர் தமிழ் திரைஉலகில் கா பதித்துள்ளார். இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் 'காதல் கொஞ்சம் தூக்கல்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை அமலா பால் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடந்து வருகிறது. இந்த நிலையில் நடிகை சர்மிளா மாந்த்ரேவின் கவர்ச்சி படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அதைப்பார்த்த நடிகை சர்மிளா மாந்த்ரேவின் ரசிகர்கள் பலரும் அவரது வசீகர அழகை புகழ்ந்து வருகிறார்கள்.