< Back
சினிமா செய்திகள்
நடிகை வெளியிட்ட அழுகை வீடியோவால் பரபரப்பு...!
சினிமா செய்திகள்

நடிகை வெளியிட்ட அழுகை வீடியோவால் பரபரப்பு...!

தினத்தந்தி
|
21 Aug 2023 9:51 AM IST

நடிகை அனுசுயா கண்ணீர் மல்க தேம்பி தேம்பி அழும் ஒரு வீடியோவை வெளியிட்டார்

தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர், அனுசுயா பரத்வாஜ். சமூக வலைதளங்களில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள இவர், சேலையில் கவர்ச்சி காட்டும் தனது புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

எப்போதுமே ஆளை மயக்கும் சிரிப்புடன் காட்சி தரும் அனுசுயா, கண்ணீர் மல்க தேம்பி தேம்பி அழும் ஒரு வீடியோவை வெளியிட்டார். இதை பார்த்த ரசிகர்கள் 'செல்லத்துக்கு என்ன ஆச்சு?' என கவலை கொண்டனர். அடுக்கடுக்கான கேள்விகளையும் கேட்டு ஆதங்கப்பட்டனர்.

இதற்கிடையில், ''சமூக வலைதளங்களில் எனக்கு எதிரான கருத்துகளோ, பதிவுகளோ இந்த அழுகைக்கு காரணம் அல்ல. இந்த அழுகை என் தனிப்பட்ட வாழ்க்கையில் தொடர்பு இல்லாத ஒன்று. என்னதான் சமூகவலைதள பதிவுகள் காரணமில்லை என்றாலும், அதன் மீது எனக்கு கோபம் உண்டு. ஆனால் இந்த அழுகை அழகானது'', என்று அனுசுயா பதிவிட்டார்.

இதையடுத்து பியூட்டி பார்லர் சென்ற அனுசுயா, தன்னை பலவாறு அலங்கரித்து சிரித்தபடி மகிழ்ச்சியாக இருக்கும் புதிய வீடியோவையும் வெளியிட்டார். இதனால் ரசிகர்கள் பரவசம் ஆனார்கள். ஒரு நேரத்தில் அழுகை, இன்னொரு நேரத்தில் சிரிப்பு. நீங்கள் தான் அடுத்த 'மகாநதி' என டிரோல் செய்து வருகிறார்கள்.



மேலும் செய்திகள்