< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
நட்ராஜ் நடித்துள்ள 'வெப்' படத்தின் டீசர் வெளியானது..!
|30 July 2022 4:20 PM GMT
நடிகர் நட்ராஜ் நடித்துள்ள 'வெப்' திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
சென்னை,
அறிமுக இயக்குனர் ஹரூன் இயக்கத்தில் நடிகர் நட்ராஜ் நடித்துள்ள திரைப்படம் 'வெப்'. இந்த திரைப்படத்தில் ஷில்பா மஞ்சுநாத், சுபப்ரியா மலர், ராஜேந்திரன், அனன்யா மணி, ஷாஷ்வி பாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
வேலன் புரொடக்சன்ஸ் சார்பில் வி.எம்.முனிவேலன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கிறிஸ்டோபர் ஜோசப் ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. டீசரை இயக்குனர் செல்வராகவன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். சைக்கோ திரில்லர் கதையாக உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.