< Back
சினிமா செய்திகள்
கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சினிமா செய்திகள்

'கோழிப்பண்ணை செல்லதுரை' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தினத்தந்தி
|
15 Aug 2024 9:09 PM IST

சீனு ராமசாமி இயக்கும் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தென்மேற்கு பருவக்காற்று, நீர் பறவை, தர்மதுரை ஆகிய வெற்றிப் படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குநர் சீனு ராமசாமி. இவர் இயக்கத்தில் இறுதியாக வெளியான 'மாமனிதன்' விமர்சகர்களிடையே நல்ல பெயரைப் பெற்றது. இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் 'கோழிப்பண்ணை செல்லதுரை' என்கிற பெயரில் புதிய படத்தை இயக்க வருகிறார்.

புதுமுகங்கள் பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த ஆண்டு தேனி மாவட்டம் பெரியகுளத்தில் துவங்கியது. சீனு ராமசாமி இயக்கும் இந்தப் படத்தில் யோகி பாபு, புதுமுகங்கள் ஏகன், பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் முத்தையா, சத்யா உட்பட பலர் நடிக்கின்றனர். அசோக்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைக்கிறார். வைரமுத்து, கங்கை அமரன், பா.விஜய், ஏகாதசி உட்பட பலர் பாடல்கள் எழுதுகின்றனர். கிராமத்துப் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆண்டிப்பட்டியில் நடைபெற்றது.

விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. கிராமத்துக் கலைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி கோழிப்பண்ணை செல்லதுரை படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். அதன்படி இந்த படமானது வருகின்ற செப்டம்பர் 20ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்