< Back
சினிமா செய்திகள்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் உள்ளங்களையும் கவர்ந்த விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள் - சீமான்
சினிமா செய்திகள்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் உள்ளங்களையும் கவர்ந்த விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள் - சீமான்

தினத்தந்தி
|
22 Jun 2022 6:56 PM IST

நடிகர் விஜய்க்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

நடிகர் விஜய்யின் 48-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்குவது போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர். அவருக்கு விதவிதமாக போஸ்டர்களை ஒட்டியும் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் விஜய்க்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "தனது இயல்பான நடிப்பாலும், நளினமான நடனத்தாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத்தரப்பு மக்களின் உள்ளங்களையும் கவர்ந்து தமிழ்த்திரையுலகின் உச்ச நட்சத்திரமாக மிளிரும் அன்புத்தம்பி விஜய் அவர்களுக்கு எனது உளம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!" என்று கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்