< Back
சினிமா செய்திகள்
2 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் இரண்டாவது பாடல்... அயலான் படத்தின் புதிய அப்டேட்...!
சினிமா செய்திகள்

2 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் இரண்டாவது பாடல்... அயலான் படத்தின் புதிய அப்டேட்...!

தினத்தந்தி
|
18 Dec 2023 1:44 PM IST

சமீபத்தில் அயலான் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

சென்னை,

ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

ஏலியன் கதைக்களத்தில் அதிக பொருட்செலவில் உருவாக்கப்படும் இந்த படத்திலிருந்து 'வேற லெவல் சகோ' என்ற பாடல் கடந்த 2021ம் ஆண்டு வெளியாகியிருந்தது. படம் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாகியும் படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகாததால் ஒருவேளை படம் கைவிடப்பட்டதா என ரசிகர்களிடையே கேள்வி எழுந்தது.

அந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 12-ந் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் முதல் பாடல் வெளியாகி சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 'அயலா அயலா' எனத் தொடங்கும் அந்த பாடல் வரும் 20ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்