லைப் இஸ் ஆன்.. ரெக்க வீசு....வைரலாகும் அன்னபூரணி படத்தின் இரண்டாவது பாடல்..!
|நயன்தாரா நடித்துள்ள அன்னபூரணி படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.
சென்னை,
இந்திய திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா தற்போது, இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு 'அன்னபூரணி' என்று பெயரிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் தயாராகியுள்ள இந்த படத்தில் நடிகர் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ளார்.
சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்ரவர்த்தி, கே.எஸ்.ரவிகுமார், ரேணுகா, பூர்ணிமா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜீ ஸ்டூடியோஸ், நாட் ஸ்டூடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே 'அன்னபூரணி' படத்தின் முதல் பாடல் நயன்தாராவின் பிறந்தநாள் அன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது 'லைப் இஸ் ஆன்' என்ற இரண்டாவது பாடலும் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. ஸ்ரீநிதா ஷிவாத்மிகா மற்றும் கோகுல் இணைந்து பாடியுள்ள இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.