< Back
சினிமா செய்திகள்
சுட்டெரிக்கும் வெயில் - தண்ணீர், நீர் மோர் பந்தல் அமைக்க சூர்யா நற்பணி இயக்கம் ஏற்பாடு
சினிமா செய்திகள்

சுட்டெரிக்கும் வெயில் - தண்ணீர், நீர் மோர் பந்தல் அமைக்க சூர்யா நற்பணி இயக்கம் ஏற்பாடு

தினத்தந்தி
|
16 March 2024 9:34 AM IST

உரிய அனுமதி பெற்று தண்ணீர் பந்தலை அமைக்குமாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் சமீப காலமாக வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இந்நிலையில், அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்க செயல் தலைவர் ஆர்.ஏ. ராஜு, அமைப்பாளர் ஆகியோர் மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் தெரிவித்திருப்பதாவது,

தற்போது வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொது மக்களுக்கு உதவும் விதமாக உங்களது பகுதியில் முக்கிய இடங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் நீர் மோர், தண்ணீர் பந்தல் அமைக்கும் படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

அதேபோல பறவைகளின் தாகம் தீர்ப்பதற்காக மொட்டை மாடியில் தண்ணீர் தொட்டியும், விலங்குகளுடைய தாகத்தை தீர்க்க ஏற்ற இடங்களில் தண்ணீர் தொட்டியும் அமைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். தண்ணீர் பந்தலை பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறு இல்லாமலும் உரிய அனுமதி பெற்றும் அமைக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்