< Back
சினிமா செய்திகள்
இறுக்கமான உடை அணியும்படி அறைந்தார்... கணவரை விவாகரத்து செய்த நடிகை காட்டம்
சினிமா செய்திகள்

இறுக்கமான உடை அணியும்படி அறைந்தார்... கணவரை விவாகரத்து செய்த நடிகை காட்டம்

தினத்தந்தி
|
29 Dec 2022 2:34 PM IST

இறுக்கமான உடை அணியும்படி கன்னத்தில் அறைந்ததாக கணவரை விவாகரத்து செய்த நடிகை கரிஷ்மா கபூர் காட்டமாக அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் கரீனா கபூரின் சகோதரி கரிஷ்மா கபூர். இவரும் பிரபல நடிகை ஆவார். கரிஷ்மா கபூர் ஒரு தொழில் அதிபரை திருமணம் செய்து சில ஆண்டுகளுக்கு பிறகு விவாகரத்து செய்து பிரிந்தார். இவர்களுக்கு சமீரா, கியாரா ராஜ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கணவர், மாமியார் மீது கரிஷ்மா கபூர் வரதட்சணை வழக்கும் தொடர்ந்தார். தற்போது அந்த வேதனையான சம்பவங்களை நினைவுப்படுத்தி காட்டமாக கரிஷ்மா கபூர் அளித்துள்ள பேட்டியில், "திருமணத்திற்கு முன்பு எனது மாமியார் பரிசாக ஒரு உடையை வாங்கிக் கொடுத்தார். எனக்கு ஒரு மகன் பிறந்த பிறகு கொஞ்சம் குண்டாகி விட்டேன். அப்போது என் மாமியார் பரிசாக அளித்த உடையை என் கணவர் அணிய சொன்னார். அந்த உடை எனக்கு இறுக்கமாக இருக்கிறது. அணிய முடியாது என்றேன். உடனே என்னை அவர் ஓங்கி அறைந்தார். என் மாமியாரையும் அழைத்து என்னை அறைய சொன்னார். இப்படி எத்தனையோ பிரச்சினைகள் இதன் நடுவில்தான் எங்கள் விவாகரத்து நடந்தது'' என்றார்.

மேலும் செய்திகள்