< Back
சினிமா செய்திகள்
பள்ளிக் குழந்தைகள் வாழ்வியல் கதை
சினிமா செய்திகள்

பள்ளிக் குழந்தைகள் வாழ்வியல் கதை

தினத்தந்தி
|
26 May 2023 10:23 AM IST

'பாபா பிளாக் ஷீப்' என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் விருமாண்டி படத்தில் நடித்து பிரபலமான அபிராமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். ராஜ்மோகன் டைரக்டு செய்துள்ளார். படம் பற்றி அவர் கூறும்போது, ``பள்ளிக் குழந்தைகளின் மழலை, சேட்டைகள், மகிழ்ச்சி, துன்பம் என்று அவர்களின் வாழ்வியலை சொல்லும் படமாக தயாராகி உள்ளது.

பிரசவம் முதல் பள்ளி வரை ஒரு குழந்தையை சுமக்கும் தாய் கதாபாத்திரம் முக்கியமாக இருந்தது. அதில் நடிக்க அபிராமியை அணுகினேன் கதையை கேட்டதும் உடனே சம்மதித்தார். அவரது கதாபாத்திரத்துக்கு பிரமாதமாக உயிர் கொடுத்து உள்ளார். ஒரு காட்சியில் அவரது நடிப்பை பார்த்த படக்குழுவினர் கண் கலங்கினார்கள். இந்தப் படம் மீண்டும் அபிராமிக்கு திருப்புமுனை படமாக அமையும்'' என்றார். இதில் அயாஸ் நரேந்திரபிரசாத், அம்மு அபிராமி, மதுரை முத்து, விக்னேஷ்காந்த், சுப்பு பஞ்சு, சுரேஷ் சக்கரவர்த்தி, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விரைவில் திரைக்கு வர உள்ளது. இசை: சந்தோஷ் தயாநிதி, ஒளிப்பதிவு: சுதர்சன் சீனிவாசன். தயாரிப்பு: ராகுல்.

மேலும் செய்திகள்