< Back
சினிமா செய்திகள்
லியோ படத்தில் நடிகர் விஜய் நடிக்கும் காட்சிகள் நிறைவு - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டுவீட்
சினிமா செய்திகள்

'லியோ' படத்தில் நடிகர் விஜய் நடிக்கும் காட்சிகள் நிறைவு - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டுவீட்

தினத்தந்தி
|
11 July 2023 12:39 AM IST

நடிகர் விஜய் லியோ' திரைப்படத்தில் தனக்கான காட்சிகளை நடித்து முடித்துள்ளார்.

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 'லியோ' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் இடம்பெற்ற "நா ரெடி" பாடல் விஜய்யின் பிறந்தநாளையொட்டி வெளியாகி யூடியூபில் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'லியோ' திரைப்படத்தில் தனக்கான காட்சிகளை நடிகர் விஜய் நடித்து முடித்துள்ளார். இதனை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், புகைப்படம் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார்.

மேலும், "இரண்டாவது பயணத்தை மீண்டும் சிறப்பானதாக மாற்றியதற்கு நன்றி அண்ணா" என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்