< Back
சினிமா செய்திகள்
மீண்டும் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டும் சாயிஷா

image courtecy:instagram@sayyeshaa

சினிமா செய்திகள்

மீண்டும் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டும் சாயிஷா

தினத்தந்தி
|
23 Jun 2024 8:06 AM IST

சாயிஷா மீண்டும் சினிமாவில் நடிக்க இருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது

சென்னை,

நடிகை சாயிஷா தெலுங்கு படமான 'அகில்' படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். பிறகு, அஜய் தேவ்கானின் 'சிவாய்' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, 'வனமகன்' படம் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் சாயிஷா.

மேலும் தமிழில் இவர், 'கடைக்குட்டி சிங்கம்,' 'ஜுங்கா,' 'கஜினிகாந்த்,' 'காப்பான்', 'டெடி' ஆகிய படங்களில் நடித்துள்ளார். பின்னர், நடிகர் ஆர்யாவை 2019ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அரியானா என்ற மகள் இருக்கிறார்.

திருமணத்திற்கு பிறகு படங்கள் நடிப்பதை தவிர்த்த இவர், சிறிய இடைவெளிக்கு பிறகு 'பத்து தல' படத்தில் கவர்ச்சி குத்தாட்டம் போட்டார். இதில், அவரது நடனம் பெரியளவில் பேசப்பட்டது.

இந்நிலையில், நடிகை சாயிஷா மீண்டும் படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையொட்டி அவர் கதைகள் கேட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சாயிஷா மீண்டும் சினிமாவில் நடிக்க இருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அவரது ரீ-எண்ட்ரியை எதிர்பார்ப்பதாக ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்