< Back
சினிமா செய்திகள்
மீண்டும் வில்லனாக சத்யராஜ்
சினிமா செய்திகள்

மீண்டும் வில்லனாக சத்யராஜ்

தினத்தந்தி
|
23 Dec 2022 3:21 PM IST

`அங்காரகன்' படத்தில் சத்யராஜ் போலீஸ் அதிகாரியாக வருகிறார். அவரது கதாபாத்திரம் வில்லத்தனமாக உருவாக்கப்பட்டு உள்ளது.

ஜோமோன் பிலிப் மற்றும் ஜீனா ஜோமோன் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் `அங்காரகன்'. இதில் நாயகனாக ஶ்ரீபதி நடிக்கிறார். இவர் சாப்ட்வேர் நிறுவனத்தில் சீனியர் மேலாளராக பணியாற்றியவர். நாயகியாக நியா நடிக்கிறார். அங்காடித் தெரு மகேஷ், ரெய்னா காரத், ரோஷன், அப்புக்குட்டி, தியா, நேகா ரோஸ், குரு சந்திரன், கேசிபி பிரபாத் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் சத்யராஜ் போலீஸ் அதிகாரியாக வருகிறார். அவரது கதாபாத்திரம் வில்லத்தனமாக உருவாக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே பல படங்களில் வில்லனாக வந்த அவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் வில்லன் அவதாரம் எடுக்கிறார். இந்தப் படத்தை மோகன் டச்சு இயக்குகிறார். இவர் பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். இசை: கு.கார்த்திக்.

மேலும் செய்திகள்