< Back
சினிமா செய்திகள்
சத்யராஜின் 250-வது படம்
சினிமா செய்திகள்

சத்யராஜின் 250-வது படம்

தினத்தந்தி
|
11 Aug 2023 12:42 PM IST

கதாநாயகன், வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வரும் சத்யராஜ், தற்போது `ஜாக்சன் துரை 2' என்ற பேய் படத்தில் நடிக்கிறார். இதன் முதல் பாகமான `ஜாக்சன் துரை' கடந்த 2016-ல் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. இதில் தனது மகன் சிபிராஜூடன் அவர் இணைந்து நடித்து இருந்தார்.

இதையடுத்து 7 ஆண்டுகளுக்கு பிறகு `ஜாக்சன் துரை' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய தரணிதரன் இரண்டாம் பாகத்தையும் டைரக்டு செய்கிறார். இதிலும் சத்யராஜ், சிபிராஜ் இணைந்து நடிக்கிறார்கள். இது சத்யராஜூ க்கு 250- வது படம்.

இந்தப் படத்துக்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார். கல்யான் வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. படத்தின் முதல் தோற்ற போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்