< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
சத்யராஜ் - வசந்த் ரவி நடித்துள்ள 'வெப்பன்' திரைப்படம் ஜூன் 7ம் தேதி வெளியாகும் - படக்குழு அறிவிப்பு
|29 May 2024 1:51 PM IST
சத்யராஜ் - வசந்த் ரவி நடித்துள்ள 'வெப்பன்' திரைப்படம் ஜூன் 7ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை,
சவாரி, வெள்ளை ராஜா ஆகிய படங்களை இயக்கிய குகன் சென்னியப்பன் இயக்கத்தில் சத்யராஜ், வசந்த் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'வெப்பன்'. ஆக்சன், த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது. ஆயுதங்களால் அழிக்க முடியாத ஒரு சூப்பர் ஹியூமன் கதையாக இப்படம் தயாராகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் இன்று வெளியாகி உள்ளது. அதாவது இந்த படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி இப்படம் வரும் ஜூன் 7ம் தேதி திரைக்கு வரும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக, மே மாதம் இப்படம் வெளியாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.