< Back
சினிமா செய்திகள்
வில்லன் வேடங்களை விரும்பும் சத்யராஜ்...!
சினிமா செய்திகள்

வில்லன் வேடங்களை விரும்பும் சத்யராஜ்...!

தினத்தந்தி
|
22 Aug 2023 1:23 PM IST

‘அங்காரகன்' என்ற படத்தில் சத்யராஜ் வில்லனாக வருகிறார்

நாயகனான ஸ்ரீபதி மற்றும் 'அங்காடித்தெரு' மகேஷ், நியா, ரெய்னா காரத், ரோஷன் உள்ளிட்ட பலர் 'அங்காரகன்' என்ற படத்தில் நடித்துள்ளனர். சத்யராஜ் வில்லனாக வருகிறார். மோகன் டச்சு டைரக்டு செய்துள்ளார்.

இந்த பட நிகழ்ச்சியில் சத்யராஜ் பங்கேற்று பேசும்போது, "லவ் டுடே படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டபோது தயக்கம் இருந்தது. ஆனாலும் நடித்தேன். அந்த படம் வெற்றியை பெற்றது. வால்டர் வெற்றிவேல், அமைதிப்படை காலத்தில் சினிமா என் கையில் இருந்தது. இப்போது நான் சினிமாவின் கையில் இருக்கிறேன்.

தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறேன். என் கையில் தற்போது 20 படங்கள் இருக்கின்றன. நல்ல அப்பாவாக தொடர்ந்து நடித்து வருவது போரடிக்கிறது. அதிலும் ஏதாவது வில்லத்தனம் இருந்தால் நடிக்க தயார். நீண்ட நாளைக்கு பிறகு மீண்டும் வில்லன் வேடத்தில் நடித்திருந்தாலும் தொடர்ந்து இதேபோல நடிப்பேன் என சொல்ல முடியாது.

வில்லனாக வேடங்களில் நடிப்பது ஒரு சுகமான அனுபவம். என்னைப் பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிதான். உலக நாயகன் என்றால் கமல். தளபதி என்றால் விஜய். தல என்றால் அஜித்" என்றார்.

மேலும் செய்திகள்