'கூலி' : வில்லன் கதாபாத்திரம் குறித்து வெளியான அப்டேட்
|'கூலி' படத்தில் வில்லன் கதாபாத்திரம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
சென்னை,
நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக 'கூலி' உருவாகி வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படடத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சுருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா, நாகார்ஜுனா ஆகியோர் நடிக்கின்றனர்.
ரஜினியுடன் சுமார் 38 ஆண்டுகளுக்கு பிறகு சத்யராஜ் இணைந்துள்ளார். இதனால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது. இந்நிலையில், 'கூலி' படத்தில் வில்லன் கதாபாத்திரம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. இதனை, சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் இணையத்தில் ரசிகர்களுடன் உரையாடியபோது தெரிவித்திருக்கிறார். அதன்படி, இப்படத்தின் கதை முழுவதும் தனக்கு தெரியும் என்றும் ஆனால், அதில் எதையும் தற்போது வெளிப்படுத்த முடியாது என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும், சத்யராஜ் இப்படத்தில் வில்லனாக நடிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில், இப்படத்தில் நடிக்கும் முக்கிய நட்சத்திரங்களின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியானது. இதில், மலையாள நடிகர் சவுபின் சாஹிர் தயாளாகவும், சுருதிஹாசன் பிரீத்தியாகவும், உபேந்திரா காளிஷாவாகவும், சத்யராஜ் ராஜசேகராகவும், நாகார்ஜுனா சைமனாகவும், ரஜினிகாந்த் தேவா கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.