< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
சதீஷ் நடிக்கும் வித்தைக்காரன் படத்தின் டீசர் அப்டேட்..!
|22 July 2023 6:20 AM IST
சதீஷ் நடிக்கும் வித்தைக்காரன் படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்னை,
இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குனராக பணியாற்றிய வெங்கி இயக்கத்தில் சதீஷ் நடித்து வரும் திரைப்படம் 'வித்தைக்காரன்'. இதில் கதாநாயகியாக சிம்ரன் குப்தா நடிக்கிறார். மேலும் ஆனந்தராஜ், ஜான் விஜய், ரமேஷ் திலக், தங்கதுரை, மதுசூதனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை அருள்நிதி நடிப்பில் வெளியான தேஜாவு படத்தை தயாரித்த வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரிக்கிறார்.
சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி 'வித்தைக்காரன்' படத்தின் டீசர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த டீசரை நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் இருவரும் வெளியிடுகின்றனர்.