மீண்டும் நடிக்க வந்த சதா
|நடிகை சதா நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
தமிழில் 'ஜெயம், வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, உன்னாலே உன்னாலே' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சதா, கடைசியாக சதா நடிப்பில் 2018-ல் 'டார்ச் லைட்' படம் வெளியானது. தெலுங்கு, கன்னட பட உலகிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். பிறகு சினிமாவை விட்டு விலகினார்.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். பிரபல தெலுங்கு டைரக்டர் தேஜா புதிய படமொன்றை இயக்கி வருகிறார். இதில் பிரபல நடிகர் ராணாவின் சகோதரர் அபிராம் கதாநாயகனாக நடிக்கிறார். படத்துக்கு 'அகிம்சா' என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தில் சதா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சதா நடிப்பதை படக்குழுவினர் ரகசியமாக வைத்து இருந்தனர்.
தற்போது படத்தின் டிரெய்லர் வெளியான நிலையில் அதில் சதாவும் இருப்பதை பார்த்து அவர் மீண்டும் நடிக்க வந்து இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த படம் மூலம் சினிமாவில் இன்னொரு ரவுண்டை தொடங்கும் முடிவில் இருக்கிறார். தமிழ் படங்களில் நடிக்கவும் விருப்பம் தெரிவித்து உள்ளார்.