< Back
சினிமா செய்திகள்
ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார்!
சினிமா செய்திகள்

ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார்!

தினத்தந்தி
|
9 July 2024 3:02 PM IST

'ஜோக்கர்' பட இயக்குநர் ராஜு முருகன் இயக்கும் புதிய திரைப்படத்தில் சசிகுமார் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

சென்னை,

2014ம் ஆண்டு வெளியான 'குக்கூ' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ராஜு முருகன். அதை தொடர்ந்து அவர் இயக்கிய 'ஜோக்கர்' திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளை குவித்ததுடன் சிறந்த பிராந்திய மொழி திரைப்படம் என்ற பிரிவின் கீழ் தேசிய விருதையும் பெற்றது. முதல் படத்திலேயே தேசிய விருதை பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் ராஜு முருகன்.

அதை தொடர்ந்து ஜிப்ஸி, ஜப்பான் உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜு முருகனுக்கு இரு படங்களும் தோல்வி படமாக அமைந்தது. தற்போது ராஜு முருகனுக்கு கை கொடுக்க உதவி கரம் நீட்டியுள்ளார் நடிகரும் இயக்குநருமான சசிகுமார்.


'சுப்ரமணியபுரம்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான சசிகுமார் அதை தொடர்ந்து 'நாடோடிகள்' போன்ற பல வெற்றி படங்களை இயக்கி நடித்து வந்தார். பின்னர் ஹீரோவாக அறிமுகமாகி பல படங்களில் நடிக்க துவங்கினார். 'அயோத்தி' படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.

தற்போது கேரக்டர் ரோலில் சிறப்பாக நடித்து வரும் சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கருடன்' படம் நல்ல ஒரு வரவேற்பையும் பாராட்டையும் பெற்று கொடுத்தது. அதன் மூலம் அவரின் மார்க்கெட்டும் உயர்ந்துள்ளது.

ராஜு முருகன் தற்போது சிறிய பட்ஜெட் படம் ஒன்றை இயக்கி வருகிறார். அப்படத்தின் ஹீரோவாக சசிகுமார் நடிக்க ஹீரோயினாக கன்னட நடிகை சைத்ரா ஆச்சார் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். கிராமப்புற கதைக்களத்தை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்க கோவில்பட்டி சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விரைவில் படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்