< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
சசிகுமார் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
|9 Feb 2024 10:23 PM IST
இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.
சென்னை,
இயக்குனர் சத்ய சிவாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பிரீடம்' (Freedom). இந்த படத்தில் சசிகுமார், லிஜோ மோல் ஜோஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை பாண்டியன் பரசுராமன் தயாரிக்கிறார்.
ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்துக்கு உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.
இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டரை ஜி.வி.பிரகாஷ்குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.