< Back
சினிமா செய்திகள்
சூரரைப் போற்று இந்தி ரீமேக் டிரைலர் வெளியீடு குறித்த அறிவிப்பு
சினிமா செய்திகள்

'சூரரைப் போற்று' இந்தி ரீமேக் டிரைலர் வெளியீடு குறித்த அறிவிப்பு

தினத்தந்தி
|
14 Jun 2024 12:23 PM GMT

‘சூரரைப் போற்று’ படத்தின் இந்தி ரீமேக் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வௌியாகி உள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. இத்திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது. இந்தியாவின் வானூர்தி சேவையை தொடங்க நினைத்து அதில் வெற்றியும் பெற்ற திரு கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கியிருந்தார். 2D என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் சூர்யா தயாரித்தார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

இத்திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக ஹிட் அடித்தது. மக்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றது. இந்நிலையில் இந்த படத்தை இயக்குனர் சுதா கொங்கரா ஹிந்தியில் சர்பிரா என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார். இதில் அக்சய் குமார் கதாநாயகனாக நடிக்கிறார். ராதா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இப்படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்க, சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, வரும் ஜூன் 18-ம்தேதி படத்தின் டிரைலர் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்