< Back
சினிமா செய்திகள்
யுவன் சங்கர் ராஜா பிறந்தநாளையொட்டி  போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த  சர்தார் 2 படக்குழு
சினிமா செய்திகள்

யுவன் சங்கர் ராஜா பிறந்தநாளையொட்டி போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த 'சர்தார் 2' படக்குழு

தினத்தந்தி
|
31 Aug 2024 1:35 PM GMT

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பிறந்தநாளையொட்டி, ‘சர்தார் 2’ படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

சென்னை,

கடந்த 2022-ம் ஆண்டு, கார்த்தியின் நடிப்பில் வெளியான படம் 'சர்தார்'. இப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கினார். தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்தப் படம் இதுவரை ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. சர்தார் படத்தில் கார்த்தியுடன் லைலா, ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா, யூடியூப் பிரபலம் ரித்விக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். தேசத்துரோகி என்று முத்திரை குத்தப்பட்ட உளவாளி, உண்மையில் தேசநலனுக்காக எத்தகைய தியாகங்களைச் செய்கிறார் என்பதே படத்தின் கதை. இதில் அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் கார்த்தி.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நிலையில் கடந்த ஜூலை 12-ம் தேதி இந்த படத்தின் பூஜை சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அதைத்தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, விஜய் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். 'சர்தார் 2' படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தில் நடிகை மாளவிகா மோகனன், ரஜிஷா விஜயன் மற்றும் ஆஷிகா ரங்கநாத் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

பி எஸ் மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் சர்தார் 2 படத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் 3ம் தேதி வரை நடைபெற இருப்பதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் 5ம் தேதி தலக்கோணம் பகுதியில் தொடங்க இருப்பதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளன.

இப்படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இன்று தனது 45-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். யுவன் சங்கர் ராஜா பிறந்தநாளையொட்டி, 'சர்தார் 2' படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. அதில், இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்