'சர்தார் 2' - கதாநாயகியாக கன்னட நடிகை?
|முதல் பாகத்தில் நடித்த ராஷி கன்னா இரண்டாம் பாகத்தில் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
சென்னை,
கடந்த 2022-ம் ஆண்டு, கார்த்தியின் நடிப்பில் வெளியான படம் 'சர்தார்'. இப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கினார். இப்படத்தில் ராஷி கன்னா, லைலா, ராஜீஷா விஜயன், யுகி சேது உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தேசத்துரோகி என்று முத்திரை குத்தப்பட்ட உளவாளி, உண்மையில் தேசநலனுக்காக எத்தகைய தியாகங்களைச் செய்கிறார் என்பதே படத்தின் கதை. இதில் அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் கார்த்தி.
விறுவிறுப்பான இதன் திரைக்கதைக்காகவே இதன் இரண்டாம் பாகத்தை எதிர்பார்க்க ஆரம்பித்தனர் கார்த்தியின் ரசிகர்கள். சமீபத்தில், இரண்டாம் பாகத்திற்கான பூஜை நடந்து முடிந்தது. முதல் பாகத்தில் நடித்த ராஷி கன்னா இரண்டாம் பாகத்தில் நடிக்கவில்லை என்று தெரிகிறது.
இந்நிலையில், கன்னட நடிகை ஆஷிகா ரங்கநாத் இப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கன்னட சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஆஷிகா ரங்கநாத். இவர் தமிழில் கடந்த 2022-ம் ஆண்டு அதர்வா நடிப்பில் வெளியான 'பட்டத்து அரசன்' படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு தமிழில் 'சர்தார் 2' படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.