< Back
சினிமா செய்திகள்
சார்பட்டா பரம்பரை இரண்டாம் பாகம்... தீவிர பயிற்சியில் ஆர்யா
சினிமா செய்திகள்

'சார்பட்டா பரம்பரை' இரண்டாம் பாகம்... தீவிர பயிற்சியில் ஆர்யா

தினத்தந்தி
|
30 Jan 2024 5:31 PM IST

'சார்பட்டா பரம்பரை' இரண்டாம் பாகத்திற்காக நடிகர் ஆர்யா தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

சென்னை,

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடித்த திரைப்படம் 'சார்பட்டா பரம்பரை'. கடந்த 2021-ம் ஆண்டு நேரடியாக ஓடிடி-யில் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதில் நடித்த பசுபதி, ஜான் விஜய், ஜான் கொக்கேன், ஷபீர் ஆகியோரின் கதாபாத்திரங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

இதையடுத்து சமீபத்தில் 'சார்பட்டா பரம்பரை' இரண்டாம் பாகத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. பா.ரஞ்சித் இயக்கும் இப்படத்தை நாட்ஸ் ஸ்டுடியோஸ், நீலம் புரொடக்ஷன்ஸ், தி ஷோ பீபுள் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

இந்நிலையில், 'சார்பட்டா பரம்பரை' இரண்டாம் பாகத்திற்காக நடிகர் ஆர்யா தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பான வீடியோவை அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் செய்திகள்