< Back
சினிமா செய்திகள்
ரஜினிகாந்தை சந்தித்து வரலட்சுமியின் திருமண அழைப்பிதழை வழங்கிய சரத்குமார்
சினிமா செய்திகள்

ரஜினிகாந்தை சந்தித்து வரலட்சுமியின் திருமண அழைப்பிதழை வழங்கிய சரத்குமார்

தினத்தந்தி
|
6 Jun 2024 8:13 PM IST

நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து தனது மகள் வரலட்சுமி சரத்குமாரின் திருமண அழைப்பிதழை நடிகர் சரத்குமார், ராதிகா தம்பதியர் வழங்கினர்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய 'போடா போடி' படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். இயக்குனர் பாலா இயக்கிய 'தாரை தப்பட்டை' படம் வரலட்சுமிக்கு சிறந்த கம்பேக்காக அமைந்தது. இப்படத்தை தொடர்ந்து விக்ரம் வேதா, சர்க்கார், போன்ற பல படங்களில் குணசித்ர வேடத்திலும், வில்லியாகவும் நடித்து மிரட்டி இருந்தார்.

நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி சரத்குமாருக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிகோலய் சச்தேவுக்கும் இரு வீட்டார் பெற்றோர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

வரலட்சுமியின் திருமணம் அடுத்த மாதம் (ஜூலை 2-ம் தேதி) தாய்லாந்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று சரத்குமார் குடும்பத்தினர் நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து வரலட்சுமி திருமண அழைப்பிதழை கொடுத்து திருமணத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

இதில் சரத்குமார், ராதிகா சரத்குமார், வரலட்சுமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதனை வரலட்சுமி சரத்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரஜினிகாந்த் மற்றும் லதா இருவரையும் எனது திருமணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்