< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
திகில் கதையில் சரத்குமார்
|12 May 2023 11:46 AM IST
பொன்னியின் செல்வன், வாரிசு, ருத்ரன் படங்களை தொடர்ந்து 'போர்த்தொழில்' என்ற பெயரில் தயாராகும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கிறார். இதில் அசோக் செல்வன், நிகிலா விமல் உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கின்றனர்.
இந்த படத்தை டைரக்டர் விக்னேஷ் ராஜா டைரக்டு செய்துள்ளார். இவரது இயக்கத்தில் வரும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் புலனாய்வு திரில்லர் கதையம்சத்தில் தயாராகிறது. படத்தை அப்ளாஸ் எண்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கிறது. ஏற்கனவே கன்னடத்தில் `ஹம்பிள் பொலிட்டீசியன் நோக்ராஜ்' தமிழில் வதம், குருதிக்காலம், இரு துருவம், உள்ளிட்ட பல பிரபலமான இணையத் தொடர்களை இந்த பட நிறுவனம் தயாரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.