< Back
சினிமா செய்திகள்
சரத்குமார், கவுதம் கார்த்திக் நடிக்கும் கிரிமினல் படத்தின் போஸ்டர் வெளியீடு
சினிமா செய்திகள்

சரத்குமார், கவுதம் கார்த்திக் நடிக்கும் 'கிரிமினல்' படத்தின் போஸ்டர் வெளியீடு

தினத்தந்தி
|
25 Aug 2023 10:52 PM IST

சரத்குமார், கவுதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள ‘கிரிமினல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை,

அறிமுக இயக்குநர் தக்ஷிணா மூர்த்தி இயக்கத்தில் சரத்குமார், கவுதம் கார்த்திக் நடிப்பில் 'கிரிமினல்' திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்து இருக்கிறார். பாடல்களை சினேகன் எழுதியுள்ளார். இந்த நிலையில் 'கிரிமினல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்தின் டீசர் மற்றும் ஆடியோ விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் செய்திகள்