< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
'சூர்யா 44' படத்திற்கு இசையமைக்கிறார் சந்தோஷ் நாராயணன்....வெளியான அறிவிப்பு
|15 May 2024 8:51 PM IST
‘சூர்யா 44’ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது
சென்னை,
நடிகர் சூர்யா தற்போது நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அடுத்ததாக சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 44 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை சூர்யாவும், கார்த்திக் சுப்புராஜும் இணைந்து தயாரிக்கின்றனர். திருநாவுகரசு ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். ,
இந்நிலையில், இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக படக்குழு புதிய போஸ்டர் வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் முதல் வாரத்தில் அந்தமானில் தொடங்குகிறது.