சந்தானம் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு..!
|நடிகர் சந்தானம் நடிக்கும் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
சென்னை,
பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் 'சாண்டா 15' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்து வருகிறார். தமிழ் மற்றும் கன்னடம் என இருமொழிப் படமாக உருவாகி வரும் இந்த படத்தில் தன்யா ஹோப், ராகினி திவிவேதி இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
பார்டியூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைத்துள்ளார். சுதாகர் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். நாகூரன் ராமச்சந்திரன் படத்தொகுப்பு செய்கிறார்.
இந்த நிலையில், இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு 'கிக்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.