< Back
சினிமா செய்திகள்
நீயா, நானா? ஒரே நாளில் ரிலீசாகும் படங்கள்
சினிமா செய்திகள்

நீயா, நானா? ஒரே நாளில் ரிலீசாகும் படங்கள்

தினத்தந்தி
|
21 April 2024 9:23 AM IST

‘ஸ்டார்' படத்தில் பெண் வேடத்தில் கவின் தோன்றுவது கவனம் ஈர்த்துள்ளது.

சந்தானம்

சினிமாவில் நகைச்சுவையில் கலக்கி வந்த சந்தானம், தற்போது கதாநாயகனாக ஜொலித்து வருகிறார். கடைசியாக கடந்த ஆண்டு சந்தானம் நடித்த 'டிடி ரிட்டர்ன்ஸ்' மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனைத்தொடர்ந்து வெளியான 'கிக்', '80ஸ் பில்டப்', 'வடக்குப்பட்டி ராமசாமி' பெரியளவில் அவருக்கு கைகொடுக்கவில்லை.

இந்தநிலையில் அவரது நடிப்பில் 'இங்கு நான் தான் கிங்கு' படம், அடுத்த மாதம் (மே) 10-ந் தேதி வெளியாகிறது. நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ள இந்த படம், மீண்டும் தனது அந்தஸ்தை உயர்த்தும் என்று சந்தானம் உறுதியாக நம்புகிறாராம். இதனால் இந்த படத்தின் ரிலீசை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

அதேநாளில் கவின் நடிப்பில் 'ஸ்டார்' படமும் ரிலீசாக இருக்கிறது. சமீபத்தில் இவர் நடித்த 'டாடா' படம் வெற்றி பெற்று நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத்தந்தது. 'ஸ்டார்' படம் சில காரணங்களால் தள்ளிப்போய் மே 10-ந்தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தின் ஒரு பாடல் நேற்று வெளியானது. இதில் பெண் வேடத்தில் கவின் தோன்றுவது கவனம் ஈர்த்துள்ளது.

ஒரே நாளில் இருவரது படங்களும் வெளியாகும் நிலையில், யார் படம் வெற்றிபெறும்? என சமூக வலைதளங்களில் இரு தரப்பு ரசிகர்களும் நீயா, நானா? மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்