< Back
சினிமா செய்திகள்
சந்தானம் நடிக்கும் டிடி ரிட்டன்ஸ் 2 படத்தில் நடிக்கும் கோட் பட நடிகை?
சினிமா செய்திகள்

சந்தானம் நடிக்கும் 'டிடி ரிட்டன்ஸ் 2' படத்தில் நடிக்கும் 'கோட்' பட நடிகை?

தினத்தந்தி
|
28 Jun 2024 9:19 PM IST

சந்தானம் நடிக்கும் ‘டிடி ரிட்டன்ஸ் 2’ படத்தில் ‘கோட்’ பட நடிகை மீனாட்சி சௌத்ரி நாயகியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

கோலிவுட்டில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்திருப்பவர் நடிகர் சந்தானம். விஜய், அஜித், சூர்யா, ரஜினி, உதயநிதி, ஆர்யா, ஜீவா, என அனைத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் இவர் நகைச்சுவை நடிகராக பணியாற்றி இருக்கிறார். 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான சந்தானம், அடுத்தடுத்து ஹீரோவாக ஒப்பந்தமாகி கலக்கி வருகிறார்.

அவரது நடிப்பில் கடந்த ஜூலை மாதம் திரையரங்குகளில் வௌியாகி ரசிகர்கள் மத்தியில் சக்கைப்போடு போட்ட திரைப்படம் டிடி ரிட்டன்ஸ். இப்படத்தை பிரேம் ஆனந்த் இயக்கி இருந்தார். படத்தில் சுரபி, மசூம் ஷங்கர், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, முனீஸ்காந்த் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் ரூ.25 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. முதல் பாகத்தை இயக்கிய பிரேம் குமாரே இரண்டாம் பாகத்தை இயக்குகிறார். இதில் சந்தானம் நாயகனாகவும், கோட் பட நடிகை மீனாட்சி சௌத்ரி நாயகியாகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. நடிகர் ஆர்யா இப்படத்தை தயாரிக்கிறார். கூடுதல் தகவலாக படத்தை தயாரிக்கும் ஆர்யாவே, முக்கிய கதாபாத்திரத்திலும் நடிப்பதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்