'டிடி ரிட்டன்ஸ் 2' திரைப்படத்தின் அப்டேட்!
|‘டிடி ரிட்டன்ஸ்’ திரைப்படத்தை விட ‘டிடி ரிட்டன்ஸ் 2’ படத்தில் டபுள் மடங்கு காமெடி இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை,
கோலிவுட்டில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்திருப்பவர் நடிகர் சந்தானம். விஜய், அஜித், சூர்யா, ரஜினி, உதயநிதி, ஆர்யா, ஜீவா, என அனைத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் இவர் நகைச்சுவை நடிகராக பணியாற்றி இருக்கிறார். 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான சந்தானம், அடுத்தடுத்து ஹீரோவாக ஒப்பந்தமாகி கலக்கி வருகிறார்.
அவரது நடிப்பில் திரையரங்குகளில் வௌியாகி ரசிகர்கள் மத்தியில் சக்கைப்போடு போட்ட திரைப்படம் டிடி ரிட்டன்ஸ். இப்படத்தை பிரேம் ஆனந்த் இயக்கி இருந்தார். படத்தில் சுரபி, மசூம் ஷங்கர், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, முனீஸ்காந்த் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் ரூ.25 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது.
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. முதல் பாகத்தை இயக்கிய பிரேம் குமாரே இரண்டாம் பாகத்தை இயக்குகிறார். நடிகர் ஆர்யா இப்படத்தை தயாரிக்கிறார். கூடுதல் தகவலாக படத்தை தயாரிக்கும் ஆர்யாவே, முக்கிய கதாபாத்திரத்திலும் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் படத்தில் நிழல்கள் ரவி, லொள்ளு சபா மாறன், ரெடின் கிங்ஸ்லி, உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டு பாண்டிச்சேரி போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படம் குறித்து சில அப்டேட்டுகள் வெளிவந்துள்ளன. அதாவது டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்தை விட டிடி ரிட்டர்ன்ஸ் 2 படத்தில் டபுள் மடங்கு காமெடி இருக்கும் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தது இந்த மாதம் கடைசி வரை பாண்டிச்சேரியில் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.