< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
அடுத்த படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய சந்தானம்..!
|15 Oct 2023 11:00 PM IST
சந்தானம் இயக்குனர் ஆனந்த் இயக்கத்தில் நடித்துள்ள படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார்.
நடிகர் சந்தானம் தற்போது இயக்குனர் ஆனந்த் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார். இந்த படத்தில் சுஷ்மிதா அன்புசெழியன், பிரியாலயா, தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, முனீஷ்காந்த், மனோபாலா, பால சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் சந்தானம் தொடங்கியுள்ளார். இதனை சந்தானம் தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.