< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
சந்தானம் நடித்துள்ள 'வடக்குப்பட்டி ராமசாமி' படம் வெளியாகும் தேதி அறிவிப்பு...!
|7 Jan 2024 11:24 AM IST
பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
சென்னை,
நடிகர் சந்தானம் சமீபத்தில் வெளியான 'கிக்' படத்திற்கு பின்னர் 'டிக்கிலோனா' படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகியுடன் மீண்டும் கைக்கோர்த்துள்ளார். இந்த படத்திற்கு 'வடக்குப்பட்டி ராமசாமி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். மேலும், இந்த படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி படம் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இதில் பிப்ரவரி 2-ம் தேதியன்று படம் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.