< Back
சினிமா செய்திகள்
சந்தானம் நடித்துள்ள கிக் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு
சினிமா செய்திகள்

சந்தானம் நடித்துள்ள 'கிக்' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு

தினத்தந்தி
|
13 Jan 2023 8:49 AM GMT

சந்தானம் நடித்துள்ள 'கிக்' திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது.

பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'கிக்'. இந்த படத்தில் தன்யா போப், ராகினி திரிவேதி, கோவை சரளா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

ஃபார்டியூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டு பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் 'கிக்' படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளதை சந்தானம் புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் 'கிக்' படத்தின் புதிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி 'கிக்' திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்