< Back
சினிமா செய்திகள்
சந்தானம் நடித்துள்ள டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் ட்ரெய்லர் வெளியானது...!

கோப்புப்படம் 

சினிமா செய்திகள்

சந்தானம் நடித்துள்ள 'டிடி ரிட்டர்ன்ஸ்' படத்தின் ட்ரெய்லர் வெளியானது...!

தினத்தந்தி
|
14 July 2023 11:40 AM IST

சந்தானம் நடித்துள்ள 'டிடி ரிட்டர்ன்ஸ்' படத்தை பிரேம் ஆனந்த் இயக்கி உள்ளார்.

சென்னை,

நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நகைச்சுவை பேய் படமான 'தில்லுக்கு துட்டு' படம்போல் மீண்டும் ஒரு பேய் படத்தில் நடித்துள்ளார். பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்திற்கு 'டிடி ரிட்டர்ன்ஸ்' என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தின் பெயர் மற்றும் டீசரை படக்குழுவினர் சில மாதங்களுக்கு முன் வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தற்போது அறிவித்துள்ளது. அதன்படி 'டிடி ரிட்டர்ன்ஸ்' திரைப்படம் வருகிற ஜூலை 28-ந்தேதி திரைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் டிடி ரிட்டர்ன்ஸ் (DD Returns) படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி டிடி ரிட்டர்ன்ஸ் படத்தில் ட்ரெய்லர் தற்போது வெளியானது. தற்போது இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


மேலும் செய்திகள்