< Back
சினிமா செய்திகள்
சந்தானம் நடிக்கும் டிடி ரிட்டன்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சினிமா செய்திகள்

சந்தானம் நடிக்கும் 'டிடி ரிட்டன்ஸ்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தினத்தந்தி
|
13 July 2023 4:51 PM IST

நடிகர் சந்தானம் நடித்துள்ள ‘டிடி ரிட்டன்ஸ்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

சென்னை,

நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நகைச்சுவை பேய் படமான 'தில்லுக்கு துட்டு' படம்போல் மீண்டும் ஒரு பேய் படத்தில் நடித்துள்ளார். பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்திற்கு 'டிடி ரிட்டன்ஸ்' என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தின் பெயர் மற்றும் டீசரை படக்குழுவினர் சில மாதங்களுக்கு முன் வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் இடத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தற்போது அறிவித்துள்ளது. அதன்படி 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படம் வருகிற ஜூலை 28-ந்தேதி திரைக்கு வரும் என்றும் டிரைலர் நாளை வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் செய்திகள்