< Back
சினிமா செய்திகள்
துப்பறியும் கதையில் சந்தானம், ரியா சுமந்த்
சினிமா செய்திகள்

துப்பறியும் கதையில் சந்தானம், ரியா சுமந்த்

தினத்தந்தி
|
18 Nov 2022 8:36 AM IST

தெலுங்கில் வெளியான ‘ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா' என்ற படம் தமிழில் ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்' ' என்ற தலைப்பில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில் துப்பறிவாளன் கதாபாத்திரத்தில் சந்தானம் வருகிறார்.

நவீன் பாலிஷெட்டி மற்றும் ஸ்ருதி ஷர்மா நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா' என்ற படம் தமிழில் 'ஏஜெண்ட் கண்ணாயிரம்' என்ற தலைப்பில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கிறார். 'வஞ்சகர் உலகம்' திரைப் படத்தை இயக்கிய மனோஜ் பீதா டைரக்டு செய்துள்ளார்.

சந்தானம் ஜோடியாக ரியா சுமந்த் நடித்துள்ளார். சுருதி ஹரிஹரன், புகழ், முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, ராம்தாஸ், இந்துமதி, மதன் தட்சிணாமூர்த்தி, ஆதிரா உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர். யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதில் துப்பறிவாளன் கதாபாத்திரத்தில் சந்தானம் வருகிறார்.

படம் குறித்து டைரக்டர் மனோஜ் பீதா கூறும்போது, ''தெலுங்கு படத்தை அப்படியே ரீமேக் செய்யாமல் கதையில் சில மாற்றங்கள் செய்துள்ளேன். இதில் வழக்கமான சந்தானத்தை பார்க்க முடியாது. வேறு பரிமாணத்தில் வருகிறார். அதிகம் பேசாமல் அதே நேரம் அதிக உணர்வுகளை வெளிப்படுத்தி நடித்துள்ளார். ஒரு தாய்க்கும் மகனுக்குமான பாசப்போராட்டமே கதை. அதில் மகன் கதாபாத்திரம் துப்பறியும் ஏஜெண்ட் ஆக இருக்கும்" என்றார்.

மேலும் செய்திகள்