< Back
சினிமா செய்திகள்
மீண்டும் பேய் படத்தில் சந்தானம்
சினிமா செய்திகள்

மீண்டும் பேய் படத்தில் சந்தானம்

தினத்தந்தி
|
15 April 2023 6:29 AM IST

நகைச்சுவை நடிகராக வலம் வந்த சந்தானம் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, ஏஜெண்ட் கண்ணாயிரம், ஏ 1, குலுகுலு உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார்.

இவற்றில் தில்லுக்கு துட்டு பேய் படமாக உருவாகி இருந்தது. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்றது. சந்தானம் கதாநாயகனாக நடித்த படங்களிலேயே அதிக வசூல் குவித்த படமாகவும் இது அமைந்தது. இதையடுத்து தில்லுக்கு துட்டு 2-ம் பாகத்திலும் நடித்தார். இதுவும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் அடுத்து மீண்டும் பேய் படத்தில் சந்தானம் நடிக்கிறார். இந்த படத்துக்கு 'டிடி ரிட்டர்ன்ஸ்' என்று பெயர் வைத்துள்ளனர். இது தில்லுக்கு துட்டு படங்களின் தொடர்ச்சியாக தயாராவதாக கூறப்படுகிறது. பிரேமானந்த் டைரக்டு செய்கிறார்.

இதில் சந்தானம் ஜோடியாக சுரபி நடிக்கிறார். இவர் ஏற்கனவே நான் வேற மாதிரி, வேலையில்லா பட்டதாரி ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். ரெடின் கிங்ஸ்லி, மாறன் உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கின்றனர். படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். அது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்