< Back
சினிமா செய்திகள்
சன் ஆப் சர்தார் 2 படத்தில் அஜய் தேவ்கனுடன் இணையும் சஞ்சய் தத்
சினிமா செய்திகள்

'சன் ஆப் சர்தார் 2' படத்தில் அஜய் தேவ்கனுடன் இணையும் சஞ்சய் தத்

தினத்தந்தி
|
2 Sept 2024 5:58 PM IST

'சன் ஆப் சர்தார் 2' அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பஞ்சாபில் தொடங்க உள்ளது.

சென்னை,

அஜய் தேவ்கன், சஞ்சய் தத் நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான படம் 'சன் ஆப் சர்தார்'. இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 12 வருடங்கள் நிறைவடைந்து விட்டது. தற்போது இப்படத்தின் 2-வது பாகமான 'சன் ஆப் சர்தார் 2' உருவாகி வருகிறது. இந்த படத்தில் மிருணால் தாக்கூர், விந்து தாரா சிங், சங்கி பாண்டே, சஞ்சய் மிஸ்ரா, ரோஷ்னி வாலியா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. ஆனால் நடிகர் சஞ்சய் தத்திற்கு இங்கிலாந்து செல்வதற்கான விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால், அவர் இங்கிலாந்து செல்லவில்லை. இதனால் சஞ்சய் தத், படத்தில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக ரவி கிஷன் இணைந்திருப்பதாக தகவல் வெளியானது.

தற்போது இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை வருகிற அக்டோபர் மாதம் பஞ்சாபில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தில் டான் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் சிறப்பு தோற்றத்தில் தோன்றுவார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்