'ஹவுஸ்புல் 5' படத்தில் இணையும் சஞ்சய் தத்
|அக்சய் குமார் மற்றும் அபிஷேக் பச்சனுடன் 'ஹவுஸ்புல் 5' படத்தில் நடிகர் சஞ்சய் தத் இணைந்துள்ளார்.
'ஹவுஸ்புல்' என்பது இந்தி நகைச்சுவை திரைப்படத் தொடராகும். இந்த தொடரில் உள்ள அனைத்துப் படங்களிலும் அக்சய் குமார் மற்றும் ரித்தேஷ் தேஷ்முக் நடித்துள்ளனர். இந்த தொடரை சஜித் நதியத்வாலா தனது நாடியாட்வாலா கிராண்ட்சன் என்டர்டெயின்மென்ட் என்ற பேனரில் தயாரித்துள்ளார்.
ஒவ்வொரு படமும் முந்தைய படத்தின் கதையுடன் தொடர்பில்லாத ஒரு புதிய கதையாகவே இருக்கும். ஹவுஸ்புல் முதல்படம் 2010-ல் திரையிடப்பட்டது. இதில் அக்சய் குமார் , ஜியா கான், அர்ஜுன் ராம்பால், ஜாக்குலின் பெர்னாண்டஸ், லாரா தத்தா மற்றும் சங்கி பாண்டே ஆகியோர் நடித்தனர்.
தற்போது நடிகர் சஞ்சய் தத் 'ஹவுஸ்புல் 5' படத்தில் இணைந்துள்ளார். மேலும் இந்தப்படத்தில் அக்சய் குமார் , அனில் கபூர், அபிஷேக் பச்சன், நானா படேகர், ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் சங்கி பாண்டே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சஞ்சய் தத் இந்தப்படத்தில் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை பகிர்ந்து கொண்டது. அதில் சஞ்சய் தத் 'ஹவுஸ்புல் 5' நடிப்பதை உறுதி செய்துள்ளனர். மேலும், 5-வது பாகத்தை எட்டிய முதல் ஹிந்தி சினிமா என்ற பெருமை 'ஹவுஸ்புல்' படத்தையே சேரும். மேலும், இந்தப்படம் 2025-ம் ஆண்டு, ஜூன் 6-ந் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.