'சன் ஆப் சர்தார் 2' படத்தில் இருந்து சஞ்சய் தத் நீக்கம் - காரணம் என்ன தெரியுமா?
|'சன் ஆப் சர்தார் 2' படத்தின் படப்பிடிப்பு இங்கிலாந்தில் நடைபெற உள்ளது.
மும்பை,
அஜய் தேவ்கன், சஞ்சய் தத் நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான படம் 'சன் ஆப் சர்தார்'. இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 12 வருடங்கள் நிறைவடைந்து விட்டது. தற்போது இப்படத்தின் 2-வது பாகமான 'சன் ஆப் சர்தார் 2' உருவாகி வருகிறது.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. அதனால் படக்குழுவினர் இங்கிலாந்து செல்ல உள்ளனர். ஆனால் நடிகர் சஞ்சய் தத்திற்கு இங்கிலாந்து செல்வதற்கான விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த 1993-ம் ஆண்டு சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த காரணத்திற்காக அவர் படப்பிடிப்பிற்காக இங்கிலாந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
இதனால் சஞ்சய் தத், படத்தில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரவி கிஷன் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ரவி கிஷன் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'லாபதா லேடீஸ்' என்ற படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.