< Back
சினிமா செய்திகள்
Sanjay Dutt Opens Up on Playing Villain in South Movies
சினிமா செய்திகள்

தென்னிந்திய சினிமாவில் வில்லனாக நடிப்பது குறித்து பகிர்ந்த சஞ்சய் தத்

தினத்தந்தி
|
11 Aug 2024 4:08 AM IST

சஞ்சய் தத் தற்போது 'டபுள் ஐஸ்மார்ட்' படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.

மும்பை,

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத். இவர் தற்போது 'ஹவுஸ்புல் 5' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சஞ்சய் தத் தென்னிந்திய சினிமாவில் வில்லனாக நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

'தென் இந்திய படங்களில் நடிப்பது எனக்கு சவாலாக இருக்கும். அதில், வில்லனாக நடிக்கும்போது பல்வேறு விஷயங்களை ஆராய முடிகிறது. சரியான கதை வந்தால் காதல் படங்களிலும் நடிப்பேன். நான் இன்னும் ஒருமுறை 'சாஜன்' போன்ற படத்தில் நடிக்க விரும்புகிறேன். அது அருமையான பாடல்களுடன் கூடிய ஒரு சிறந்த படம், என்றார்.

சஞ்சய் தத் தற்போது 'டபுள் ஐஸ்மார்ட்' படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகி உள்ள இந்த படம் வரும் 15-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

சஞ்சய் தத் முன்னதாக கே.ஜி.எப், லியோ உள்ளிட்ட தென்னிந்திய படங்களில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்