< Back
சினிமா செய்திகள்
விஜய்யை மிரட்டும் கே.ஜி.எப். வில்லன்
சினிமா செய்திகள்

விஜய்யை மிரட்டும் கே.ஜி.எப். வில்லன்

தினத்தந்தி
|
12 Aug 2022 4:42 PM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க போகும் ‘தளபதி 67’ படத்தில் வில்லனாக சஞ்சய் தத் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

'மாஸ்டர்' படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய் நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக செய்திகள் வெளியானது. இதுகுறித்து கேட்கும் போதெல்லாம், 'தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து உரிய அறிவிப்பு வரட்டும்' என்று லோகேஷ் கனகராஜ் பதில் அளித்து வந்தார்.

இந்தநிலையில் புதிய கதையை லோகேஷ் கனகராஜ் தயார் செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ''புதிய படம் குறித்து விரைவில் அறிவிப்பேன்'' என்றும் அவர் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் தெரிவித்துள்ளார். விஜய் 'கால்ஷீட்' தரும் பட்சத்தில் விரைவில் படப்பிடிப்பை தொடங்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.

எப்போதுமே தனது படங்களில் வில்லன்களின் கதாபாத்திரத்தை வலுவாக வடிவமைத்து வரும் லோகேஷ் கனகராஜ் இந்த படத்திலும் தனது முத்திரையை பதிக்க இருக்கிறார். படத்தில் 6 வில்லன்கள் இணைந்து மிரட்டும் வகையில் கதையை தயார் செய்து இருக்கிறார். வில்லன்கள் பட்டியலில் 'கே.ஜி.எப்.-2' படத்தில் மிரட்டிய சஞ்சய் தத், பிரித்விராஜ் ஆகிய இருவரது பெயர்கள் இடம் பெறுகிறது. தெலுங்கு பட உலகின் முன்னணி நடிகர் ஒருவரையும் வில்லன் வேடத்தில் நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது. மற்ற 3 வில்லன்களுக்கான தேர்வு தீவிரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.

விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீண்டும் இணைவது அவர்களின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகள்