'நான் எந்த கட்சியிலும் சேரமாட்டேன்' - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த லியோ படநடிகர்
|நான் அரசியலுக்கு வருவதாக வெளியாகும் தகவல்களை நம்பவேண்டாம் என்று சஞ்சய்தத் கூறினார்.
சென்னை,
இந்தியில் முன்னணி நடிகராக இருக்கும் சஞ்சய்தத் கன்னடத்தில் தயாராகி பான் இந்தியா படமாக வெளியான கே.ஜி.எப் படத்தில் வில்லனாக வந்தார். தமிழில் லியோ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து இருந்தார்.
இந்த நிலையில் சஞ்சய்தத் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் பரவின.
இதற்கு சஞ்சய்தத் விளக்கம் அளித்து வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''நான் அரசியல் கட்சியில் சேரப்போவதாக வதந்திகள் பரவி உள்ளன. அதற்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கிறேன்.
நான் எந்த கட்சியிலும் சேரமாட்டேன். தேர்தலிலும் போட்டியிடவில்லை. அரசியலுக்கு வருவதாக இருந்தால் முதலில் நானே அதனை அறிவித்து விடுவேன். எனவே நான் அரசியலுக்கு வருவதாக வெளியாகும் தகவல்களை நம்பவேண்டாம்'' என்று கூறியுள்ளார்.
சஞ்சய்தத் தந்தையான நடிகர் சுனில்தத் மத்திய மந்திரியாக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.