சென்னை
தனுசுக்கு வில்லனாக சஞ்சய் தத்?
|‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுசுக்கு வில்லனாக நடிக்க சஞ்சய்தத்திடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தனுஷ் நடிப்பில் இந்த வருடம் 'மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன்' ஆகிய படங்கள் வந்தன. 'த கிரேமேன்' என்ற ஹாலிவுட் படமும் வெளியானது. தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகி உள்ள 'வாத்தி' படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இந்த படத்துக்கு பிறகு சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாக உள்ள சரித்திர கதையம்சம் உள்ள படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் 'பான் இந்தியா' படமாக உருவாக உள்ளது. இதில் நடிக்கும் இதர நடிகர்-நடிகை தேர்வு நடக்கிறது. இந்த படத்தில் தனுசுக்கு வில்லனாக நடிக்க சஞ்சய்தத்திடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் நடிக்க சஞ்சய்தத் ரூ.10 கோடி சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. சஞ்சய்தத் கே.ஜி.எப் 2-ம் பாகம் படத்தில் வில்லன் வேடத்தில் மிரட்டி இருந்தார். அந்த படத்துக்கு பிறகு அனைத்து மொழி படங்களிலும் வில்லனாக நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இதனாலேயே சம்பளத்தை அவர் உயர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது.